மாமன் வீடு
பல்லாங்குழி, பரமபதம்,
கண்ணாம்பூச்சி, கிச்சுக் கிச்சுத் தாம்பாளம், ஆடுபுலி
ஆட்டம் ,பம்பரம்
அத்தனையும் விளையாடி;
நெற்றி வியர்வை அரும்ப;
மாமன் வீட்டுத் திண்ணையிலே;
மரிக்கொழுந்து வாசம் பிடித்து;
மாமிக் கொடுத்த நீர் மோரில்;
மதி மயங்கி
மதிய உணவு நேரத்திலே;
மதில் மேல் பூனை
மீன் குழம்பு
செய்தி
அத்தனையும் பத்திரமாக;
நெஞ்சில் ஞாபகமாய்;
நிறைந்து காணப்படும்;
அன்றும் இன்றும் என்றும்!!
~இரா
Comments
Post a Comment